ஐஸ்வர்யா ராய் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை... உயர்நீதிமன்றம் அதிரடி!

 
ஐஸ்வர்யா ராய்


 
இந்திய திரையுலகில் மிகவும் பிரபல முண்ணனி  நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என மனு ஒன்றை அளித்துள்ளார்.  இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதில் ஐஸ்வரியா  பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்கின்றன. 


அத்துடன்   ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் பயன்படுத்துகின்றனர். இது குறித்த இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்
அங்கீகாரம் இல்லாத போதிலும், அவரது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும் ஏராளமான வலைத்தளங்களை உதாரணமாக கூறியுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றம் இதனை பதிவு செய்து  பல்வேறு நோக்கங்களுக்காக நடிகையின் புகைப்படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதி அளித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?