திருத்தணி முருகன் கோவிலில் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா, அதன் பின்னர் வை ராஜா வை மற்றும் ரஜினியை வைத்து லால் சலாம் படங்களையும் இயக்கினார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா தற்போது தனது புதிய படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திரைவட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில் அவர் திருத்தணியில் உள்ள முருகனின் ஐந்தாம் படை வீடாகிய திருத்தணி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

கோவில் தரிசனத்துடன், இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையிலும் ஐஸ்வர்யா கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். தனது புதிய பட முயற்சிகள் சிறப்பாக அமைய வேண்டி அவர் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
