வைகாசி திருவிழா... சிவகங்கையில் 250 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்!

 
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அய்யனார்குளம் பகுதியில் களதி உடைய அய்யனார் கோயில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. 

இங்குள்ள களதி உடைய அய்யனார், முத்தையா சுவாமி கோயிலில் 2 ஆண்டிற்கு ஒரு முறை வைகாசி திருவிழா நடைபெறும். அந்த வகையில் நேற்று வைகாசி திருவிழா நடந்தது. இதனையொட்டி மதுரை கோச்சடை, மானாமதுரை அருகே ஏனாதிகோட்டை பகுதியை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

மானாமதுரை

அதே நேரம் கோயிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் ஆடுகளை காணிக்கையாக செலுத்தினர். மேலும் நேற்று காலை பக்தர்கள் கோயில் முன் 250 ஆடுகளை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

மானாமதுரை

இந்த திருவிழா என்றால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் பணிக்கு சென்றிருந்தாலும் திருவிழாவுக்கு வந்து விடுவர். அந்த வகையில், மும்பையில் இருந்து வந்த பெண் பக்தரான பிரியா கூறுகையில், திருவிழாவை காண மும்பையில் இருந்து வந்துள்ளோம். இக்கோயிலில் வேண்டுதல் வைத்து சென்றால், உடனே சுவாமி நிறைவேற்றி தருவார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web