’தல மாஸ்’ விலகுவதாக அறிவித்து மீண்டும் கார் ரேஸில் களமிறங்கிய அஜீத்!
தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத். இவர் சர்வதேச கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார். நேற்று கொடுத்த பேட்டியில் கார் ரேஸில் பங்கேற்பதற்காக 9 மாதங்கள் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று திடீரென துபாயில் நடக்க உள்ள 24 மணிநேர கார் ரேஸ் கலந்து கொள்ளவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்போது மீண்டும் கார் ரேஸில், கார் ஓட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
414 and 901 both to be cheered. pic.twitter.com/Z921YOiua4
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
அஜித் இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ஆசிரிய பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2019 ம் ஆண்டு நடந்து முடிந்த ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக, திரைப்படங்களில் நடித்து வந்ததால், கார் ரேஸை விட்டு விலகியதாக கூறினார். தற்போது 'ரேஸிங்' என்கிற அணியின் தலைவராக இருக்கும் அஜித், 24 மணிநேர போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் அஜித்தின் கார் சோதனை ஓட்டத்தின் போது... தடுப்பு சுவரில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் அஜித் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார். அஜித் நலமுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரும் வழக்கம் போல் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.
கடந்த சில மணிநேரத்திற்கு முன்னர் அஜித் அதிரடியாக இந்த 24 மணிநேர கார் பந்தயத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அஜித்தின் நல்லது கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அஜித் மீண்டும் 24 மணிநேர கார் ரேஸில் கலந்து கொண்டு கார் ஓட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின் படி அஜித் 24 மணிநேரம் ஓட்டுவார் என கூறப்பட்டிருந்தது. இப்போது அவர் ஓட்டும் நேரம் குறைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் தற்போது அஜித் 24 மணிநேர கார் ரேஸில் கலந்து கொண்டு, கார் ஓட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தவிர அஜித்தின் அணி ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3, உட்பட 5 கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!