என் சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்... வைரலாகும் நடிகர் அஜித்குமார் பதிவு.!

 
அஜீத்


 
தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  தனது சினிமா பயணத்தை “அற்புதமான பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளார். எண்களின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் தனக்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார்.  
மேலும், “சினிமா துறைக்கு எந்த பின்புலமும், யாருடைய சிபாரிசும் இல்லாமல்தான் நுழைந்தேன். 33 ஆண்டுகளை இப்போது நிறைவு செய்கிறேன். எனது இத்தனை வருட திரைவாழ்வில், விடாமுயற்சி என்பது நான் கற்றுக்கொண்டதல்ல. நான் வாழ்ந்த விஷயம்.


கணக்கிட முடியாத அளவுக்கு சினிமாவில் நான் விழுந்து எழுந்துள்ளேன்.  நீங்கள் என்மேல் வைத்த நம்பிக்கை, எளிதானதல்ல ரசிகர்களாகிய நீங்கள் இல்லாமல் நான் இல்லை. உங்களின் அன்புதான் என்னை காப்பாற்றியுள்ளது. அதற்கு என் நன்றி. என்றும் அந்த அன்பையோ உங்களையோ நான் சுயநலத்துக்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்”  எனக்  கூறியுள்ளார்.  அந்த அறிக்கையில் அஜித் தனது மோட்டார் ரேசிங் ஆர்வத்தையும் பதிவிட்டுள்ளார்.  

அஜித்
2025ல் “அஜித்குமார் மோட்டார் ரேசிங்” என்ற பெயரில் மீண்டும் விளையாட்டுத் துறையில் நுழைந்ததாகவும் இது வயது வரம்பு மற்றும் தடைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கவும்   குறிப்பிட்டுள்ளார். தனது திரையுலக பயணங்களில் பங்களித்த இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “வாழு, வாழ விடு” வாசகத்துடன் முடித்தார். ரசிகர்கள் #33YearsOfAjithKumar என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?