மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடும் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இதற்கடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.
இதற்காக நாளை படக்குழு அஜர்பைஜான் கிளம்புவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், கிடைத்த இடைவேளையில் மகனுடன் அஜித் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள டர்ப் கிரவுண்டில் மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி ரிலாக்ஸ் செய்திருக்கிறார் அஜித். ஆத்விக் போட்ட பந்தில் அஜித் அவுட் ஆகி இருக்கும் காட்சிகளையும் இந்தப் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!