’தல’ இயக்குநர் வெங்கட் பிரபு சந்திப்பு.... அடுத்த படம்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

 
அஜீத்

 தமிழ் ரசிகர்களால் ‘தல’ ஆக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் மங்காத்தா. இந்தப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை கடந்த பின்னும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம். இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரை வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’.


இந்தப் படத்தை அடுத்து முண்ணனி இயக்குநர்களில் ஒருவராகி வெங்கட்பிரபுவுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைத்தன.  அந்த வகையில்  தற்போது வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து ‘தி கோட்’ படத்தை இயக்கி வருகிறார். அதேநேரம் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. விடாமுயற்சி தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விடாமுயற்சி

இந்நிலையில் அஜர்பைஜானில் வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு  “கடைசியாக இது நடந்துவிட்டது. ப்ரொமன்ஸ்” எனக் கூறியுள்ளார். அஜீத் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்க்கி வருகின்றனர்.  அத்துடன் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web