” அஜீத் குமார் ரேசிங்” கார் பந்தய அணியை தொடங்கிய ‘தல’!
தமிழ் திரையுலகில் நடிப்பை தாண்டி கார் ரேசில் ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பித்து வருபவர் தல அஜீத் குமார். பொதுவாக திரைத்துறையில் நடிகர்கள் நடிப்பு என்ற ஒன்றை மட்டும் நம்பிக் கிடக்காமல பல நடிகர்கள் தயாரிப்பாளார், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகக் கலைஞர்களாக இருந்து வருகின்றனர்.
Ajith Kumar Racing 🏁
— Suresh Chandra (@SureshChandraa) September 27, 2024
We are proud to announce the beginning of a new exciting adventure: Ajith Kumar Racing 🏁
Fabian Duffieuxwill be the official racing driver 🔥
And the amazing news? Aside of being a team owner, Ajith Kumar is back in the racing seat!
Ajith is among very… pic.twitter.com/KiFELoBDtO
சிலர் உணவகம், ஆடை வடிவமைப்பு, அழகு சாதன பொருட்கள் என வியாபாரம் சார்ந்த துறைகளில் தடம் பதித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் அஜித் குமார் ஒரு ரேஸராக கார் மற்றும் பைக் ரேசில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அத்துடன் துப்பாக்கி சுடுதல், புகைப்படக் கலைஞர், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பது மற்றும் ஓட்டுவது என பன்முகத் திறமை வாய்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் ரேஸிங் தொடர்பான தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக ரேஸிங் கார் ஓட்டுவது , ரேசிங் உடையில் அஜித் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது. இந்நிலையில் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய கார் பந்தய அணியை தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் “பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் அஜித் குமார் அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 992 GT3 கப் பிரிவில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்கும்” எனவும் பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!