மருத்துவமனை லாக்கரில் ஏ.கே.47 துப்பாக்கி... மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கியும் தீவிரவாதச் சதியில் சிக்கிய மருத்துவர் ஆதில்!

 
டெல்லி ஆதில்

காஷ்மீர் புல்வாமா மாவட்டம் குல்காமின் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆதில் அகமது, மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கியும், தீவிரவாதச் சதியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் ஆதில், உத்தரப்பிரதேசம் சஹாரன்பூரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாதம் ரூ.5 லட்சம் ஊதியம் பெற்று பணியாற்றி வந்தார். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காஷ்மீர் போலீசார் கடந்த நவம்பர் 6ம் தேதி சஹாரன்பூருக்கு சென்று அவரை கைது செய்தனர்.

டெல்லி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காஷ்மீரின் அனந்தநாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பட்டமேற்படிப்பு பயின்றது தெரிய வந்தது. மேலும், அவர் பணியாற்றிய மருத்துவமனையில் உள்ள லாக்கரில் சோதனை மேற்கொண்ட போது, ஏகே-47 துப்பாக்கி உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

டெல்லி

கைது செய்யப்பட்ட ஆதில், கடந்த அக்டோபர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமண விழாவில் மிகக் குறைந்த அளவில் சிலரை மட்டுமே விருந்தினராக அழைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான மருத்துவர் பாபர் அகமது மீதும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!