நாளை அட்சய திருதியை... வாழ்வில் வளம் சிறக்க இத மட்டும் செய்து பாருங்க!
நீரின்றி அமையாது உலகு.. நாளை அட்சய திருதியை... துணிக்கடைகளில் விற்பனை குறையும் மாதங்களில் ஆடித்தள்ளுபடி, சம்மர் ஸ்பெஷல் போல் தங்கம் வெள்ளியை விற்பனை செய்ய நகைக்கடைக்காரர்கள் கண்டுபிடித்த யுக்தி அட்சய திருதியை. இந்த நாளில் என்ன செய்கிறோமோ அது பன்மடங்கு பெருகி வரும் என்பது ஐதீகம்.
தங்கம் வெள்ளி வாங்குவது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது தங்கம் . அதை விட முக்கியம் தனிப்பட்ட என்பதை தவிர்த்து அனைவரின் தேவை என்பதை உணர வேண்டும்.
அந்த வகையில் உலகம் முழுவதும் மாறி வரும் காலநிலையால் பெய்தால் பெருமழை, இல்லையேல் நீரின்றி வறட்சி , பூகம்பம், புயல் சூறாவளி, எரிமலை வெடிப்பு, பனிப்பாறை உருகுதல் எனத் தொடர்கிறது. அனைத்து மக்களுக்கு உடனடி அத்தியாவசிய தேவை தண்ணீர். கடந்த ஆண்டு அட்சயதிருதியைக்கு அனைவரும் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. தண்ணீரை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். சிலர் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட்டாலும் பலர் அதனை நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தனர். அதன் விளைவு கடந்த ஆண்டு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் நாளை வரும் அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பில் நிறைய தண்ணீரை நிரப்பி பூஜை அறையில் இறைவன் முன்பு வைத்து எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர் கிடைக்கவும் நல்ல மழை பொழிந்து ஆறு, குளம், குட்டை, ஏரி எல்லாம் நீர் நிரம்பி பசுமையாக விவசாயம் செழிக்கவும், அமைதி ஆனந்தம் பெருக பிரார்த்தனை செய்யுங்கள். இதுவே சரியான அவசிய தேவை என உணர்ந்தவர்கள் அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள் என பாரபட்சமின்றி கூறி அவர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் வைக்கலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!