சென்னையில் அல்கொய்தா பயங்கரவாதி.... சுற்றி வளைத்த போலீசார்!

 
ஷேக்

மேற்குவங்க மாநிலம் கன்க்சா  பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த தீவிரவாதி 21 வயது  ஹபிபுல்லா. பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹபிபுல்லா   கடந்த ஆண்டு அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  இந்த வழக்கில் தொடர்புடைய 30 வயது ஷேக் கணாவர்  சென்னையில் பதுங்கி இருப்பதாக மேற்குவங்க போலீசாரிடம் தெரிவித்தார்.  

ஷேக்

அதன் பேரில் டிஎஸ்பி பிகஸ் கண்டி டேவ் தலைமையிலான போலீசார் இன்று காலை கோயம்பேடு காவல் நிலையத்தில்  அன்வர் தொடர்பான தகவல்களை தெரிவித்தனர்.  அவரை பிடிக்க உதவி செய்யுமாறு சென்னை காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து விருகம்பாக்கம் டாய்சா அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தங்கி அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் அயனிங் வேலை செய்து வந்த ஷேக் கணாவரை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீஸ்

இவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அல்கொய்தா மற்றும் பங்களாதேஷ் நாட்டில் செயல்படும் மத அடிப்படை வாத இயக்கங்களுக்கு ஆதரவாளர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அப்பாவி இளைஞர்களை மூளை செலவு செய்து பயங்கரவாத இயக்கங்களில் சேர்ப்பது, பிரச்சாரம், நிதி திரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து மேற்குவங்க போலீசார் அவரை  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று மேற்குவங்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web