மதுரைக்குள் நுழைந்தார் அழகர்... எதிர்சேவையில் அதிரும் கோவிந்தா கோஷம்!

 
கள்ளழகர்

தங்கப்பல்லக்கில் கண்டாங்கிப் பட்டுடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி, வேத மந்திரங்கள் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும்  கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர்,  இன்று காலையில் மதுரை நகரத்துக்குள்  நுழைந்தார். மதுரை நகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் அழகரை எதிர்கொண்ட பக்தர்கள்  கோவிந்தா கோவிந்தா என  முழங்க எதிர்சேவை செய்து வரவேற்றனர்.  


நாளை ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை, சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர்  மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். 
நாளை மறுதினம் 24 ம் தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26 ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளது. சித்திரைத் திருவிழாவை ஒட்டி மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web