சரக்கு அடிக்காமலேயே வயிற்றில் சுரக்கும் ஆல்கஹால்... வினோத நோயால் அவதிப்படும் பெண்!

 
ஆல்கஹால்

 கனடா நாட்டில் வசித்து வரும் 50 வயது பெண்  ஒருவர் வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி இவர் மது  குடிக்காமலேயே அவருடைய வயிற்றில் ஆல்கஹால் சுரக்கிறது. இதனால் இவர்  மது போதைக்கு அடிமையாகியுள்ளார்.  இந்த அரியவகை நோய் ப்ரூவரி சிண்ட்ரோம் எனப்படுகிறது.  இந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குடலில் தானாகவே ஆல்கஹால் உருவாகிவிடுகிறது.  இந்தப் பெண் கடந்த  2 வருடங்களாக கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.  

மது அருந்தாமலேயே மது போதைக்கு அடிமையானதால் 3 முறை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று சரியாகியுள்ளார்.  அந்தப் பெண் மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் மருத்துவர்கள் ஆல்கஹால் குடிக்க மாட்டேன் என அவர் கூறியதை மருத்துவர்கள் நம்பவே இல்லை.  அதன் பிறகு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு தான் மருத்துவர்களே இதனை ஒத்துக் கொண்டனர்.  

தற்போது அந்த பெண்மணி பூஞ்சை காளான் உணவுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார். இந்த நோய்  ப்ரூவரி சிண்ட்ரோம்  நீரிழிவு நோய், அலர்ஜி குடல் நோய், குடல் டிஸ்மோடிலிட்டி கோளாறுகள் மற்றும் கல்லீரல் நோய் போன்றவைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web