உஷார்... இன்று முதல் அமலுக்கு வரும் 7 முக்கிய விதிமுறைகள்!

 
செப்டம்பர்

இன்று செப்டம்பர் 1 ம் தேதி மாதம் துவங்கும் நிலையில், இன்று முதல் சில விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி கிரெடிட் கார்டு, ஓய்வூதிய திட்டம் முதல் வருமான வரி தாக்கல் வரை முக்கிய விதிமுறைகள் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வருமான வரித் துறை இந்த முறை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 30, 2025-லிருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   

இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்   கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை   செப்டம்பர் 30 வரை தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே இந்த கால அவகாசம் ஜூன் 30 ஆக இருந்தது, பின்னர் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

அஞ்சல் துறையை பொறுத்தவரை  செப்டம்பர் 1, 2025 முதல் உள்நாட்டு அஞ்சல் சேவையை ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கிறது. இனிமேல் சாதாரண அஞ்சல் கிடையாது. எல்லா வகையான அஞ்சலும்  ஸ்பீட் போஸ்ட் டெலிவரியாக மட்டுமே இருக்கும்.  

செப்டம்பர் 1, 2025 முதல் எஸ்பிஐ  தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டைகளுக்கான விதிகளில் மாற்றங்களை  செய்துள்ளது. அதன்படி  டிஜிட்டல் கேமிங் மற்றும் அரசு வலைத்தளங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு  இனி வெகுமதி (ரிவார்டு) புள்ளிகளைப் பெற முடியாது. 

வணிக சிலிண்டர்

இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகள்  444 நாள் மற்றும் 555 நாள் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி உடன் சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் ஜெட் எரிபொருள்  விலைகளையும் மாற்றியமைக்கப்படும் கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில், வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ₹33.50 குறைந்தது. அதே போல் செப்டம்பரிலும் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.  வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் இல்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?