உஷார்... வதந்தியை நம்பாதீங்க... வருமான வரி தாக்கல் செய்ய தேதி நீட்டிப்பு கிடையாது... வருமான வரித்துறை விளக்கம்!

மார்ச் 31ம் தேதியோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறியிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் இன்று ஜூலை 31ம் தேதியுடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பழைய ஸ்லாப்பில் வருமான வரி தாக்கல் செய்து வருபவர்களுக்கு இன்றுக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், நாளை முதல் அபராதத்துடன் புதிய ஸ்லாப்பில் தான் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
இன்று ஜூலை 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரிக்கணக்கை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு அதன் பின்னர் அபராதத்துடன் கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி 31 டிசம்பர் 2024 வரை வருமான வரிக்கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்யலாம். அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில் அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ5000 விதிக்கப்படும். இதே போல உங்கள் வருமானம் ரூ5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ1,000 ஆகும். கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!