உஷார் மக்களே.. இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் ரெமல் புயல்.. எங்கு தெரியுமா?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று இரவு ரெமல் புயலாக மாறியது. புயல் வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் இடையே மணிக்கு 11 கி.மீ வேகத்தில் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று இரவு தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு வங்கதேசத்தின் கெபுபாரா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 முதல் 120 கிமீ வேகத்தில் காற்றும் வீசும் என்றும், அவ்வப்போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

ரெமல் புயல் காரணமாக கடலோர மாநிலங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புயலால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்படாவிட்டாலும், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் 27ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் அடுத்த 21 மணி நேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் கவுகாத்தி மற்றும் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சாகர் தீவு பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
