உஷார் மக்களே.. பானிபூரியால் புற்றுநோய் அபாயம்.. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

 
பானிபூரி

கர்நாடகாவில் சாலையோரங்களில் விற்கப்படும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்தனர். அப்போதுதான் பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் செயற்கை நிறமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திலும் உடனடியாக இதே புகார் எழுந்தது.

பானிபூரி

பானி பூரி தயாரிக்க பயன்படுத்தும் மசாலா தண்ணீரில் பச்சை கலர் பவுடர் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளிலும் பானி பூரியின் மசாலா தண்ணீரை சோதனை செய்து, அந்த நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இந்த அதிரடி சோதனை தொடங்கியது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "சென்னையில் 1,000க்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் இயங்கி வருகின்றன. ஆரோக்கியமான உணவுகளில் பானி பூரியும் ஒன்று. பானி பூரி சாப்பிடுவதால் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆனால், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை. கடைகளில் வெறும் கைகளால் பானி பூரியை உடைத்து, அதில் மசாலாவை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர்.

பானிபூரி

அதே போல் ஒருமுறை பயன்படுத்திய மசாலா தண்ணீரை மறுநாளே சிலர் பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்று நோய்களும் பரவுகின்றன. இதேபோல், "ஆப்பிள் கிரீன்" என்று அழைக்கப்படும் ஒரு சாயம் (நிறம்) பானி செய்ய கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை உண்டாக்கும். புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web