அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு அலெர்ட்!!

 
மழை

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று  காலை 0530 மணி அளவில் "மோக்கா" புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது.   இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

மழை

காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு நாளை மறுநாள் மே 13, 2023 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்துள்ளது. 


மே 14,2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். இன்று தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  மே 12 முதல் மே 15 வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் , மழை

சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை  ஒட்டியே இருக்கும்.  அதே நேரத்தில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  வெப்பநிலை உயரக்கூடும்.  மே 14 மற்றும் மே 15 ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2முதல்  3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web