அலர்ட்... நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கடைசி வாய்ப்பு!

 
2000
இதுவரை மாற்ற மறந்திருந்தாலோ அல்லது கடைசி தேதி முடிந்த பிறகு, சிறுவாடை சேமிப்புகளில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை என்ன
செய்வது என தெரியாமல் இருந்தீர்கள் என்றால், இது உங்களுக்கான செய்தி. இந்த முறை மிஸ் பண்ணாதீங்க. நாடு முழுவதும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கு கடைசி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
ரூ.2000 ரூபாய்
அக்டோபர் 8ம் தேதி முதல் தனிநபர்கள், நாடு முழுவதும் ரிசர்வ் வங்கியின் பிராந்தி அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்  அல்லது தங்களது வங்கி கணக்குகளில் அதற்கு சமமான தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கலாம் RBI அறிவித்திருந்தது.

இப்படி நேரில் சென்று மாற்றிக் கொள்ள முடியாதவர்கள், காப்பீடு செய்யப்பட்ட தபால் மூலமாக, ரூ.2000 நோட்டுக்களை அனுப்பி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்றும் அறிவித்து, ரிசர்வ் வங்கி, அதற்கான படிவத்தையும் வெளியிட்டிருந்தது.  இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி வரை 97 விழுகாட்டிற்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

2000

அதே வேளையில், ரூ.10,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் நிலையில், இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றி கொள்ள வசதியாக தற்போது கடைசி வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web