உஷார்... கேரளாவில் வேகமாக பரவுது நிபா வைரஸ்... 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடல்!

 
நிபா வைரஸ்

அதிர்ச்சியளிக்கும் விதமாக நமது அண்டை மாநிலமான கேரளத்தில், மீண்டும் நிபா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நிபா வைரஸ் பரவல் கேரளத்தில் வேகமெடுத்திருப்பதன் காரணமாக அம்மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரளத்தில், மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

 நிபா வைரஸ்
அதே போல் ஜூன் 28ல் கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில்  இளம்பெண் அனுமதிப்பட்டிருந்த நிலையில் அவர்  மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  

 நிபா வைரஸ்
இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு 3 மாவட்டங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.   இங்குள்ள கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடும் படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?