உஷார்... இன்று தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்.. இந்த மாவட்டங்களில் மிக கனமழை!

இன்று தமிழகத்தில் அதிகனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவுறுத்தியுள்ளது. தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 29ம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
இன்று ஜூன் 26ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று நாளை ஜூன் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!