உஷார்... கழிவு நீரை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் 2 லட்சம் அபராதம்... 2 ஆண்டு சிறை; கலெக்டர் உத்தரவு!

 
கழிவு நீர் தொட்டி

உலக நாடுகள் எத்தனையோ முன்னேற்றம் அடைந்த போதிலும் நம் நாட்டில் ஆழ்துளை கிணறுகளுக்காக தோண்டப்படும் பள்ளத்தில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பதும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி கழிவு நீரை அகற்றுவதும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு பலர் உயிரிழந்தாலும், இது குறித்த கடுமையான சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இது தொடர்கதையாகவே பல மாநிலங்களில் இருந்து வருகிறது.

மனிதர்கள் கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் -2013, படி வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்வதற்கு எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும். 
கழிவு நீர் தொட்டி

இந்த சட்டத்தை மீறி தனிநபர் ஒருவரை இந்த பணிகளுக்கு நிர்பந்தித்தோ அல்லது பணியில் அமர்த்தியோ, அப்படி சுத்தம் செய்யும் போது, சுத்தம் செய்பவர் விஷவாயு தாக்கியோ அல்லது வேறு வகையிலோ மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ கட்டிட உரிமையாளர், குடியிருப்பவர், ஒப்பந்ததாரரே இந்த விபத்திற்கு முழு பொறுப்பாளர் ஆவார் என்கிறது சட்டம். 

அதன் பின்னர் கட்டிடத்தின் உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர்/ ஒப்பந்ததாரர் மீது காவல்துறை மூலம் FIR பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விஷ வாயு சாக்கடை

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கழிவு நீரை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தி பணியில் அமர்த்தினால், பணியில் அமர்த்துபவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2 லட்சம் வரையிலான அபராதம் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web