உஷார்... செல்ஃபி மோகத்தால் இளம்பெண் உயிரிழப்பு!

 
இளம்பெண் செல்ஃபி தற்கொலை

கர்நாடக மாநிலத்தில்   சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன்  வசித்து வருபவர் நந்தினி .  இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

பள்ளி மானவி தற்கொலை

சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு நந்தினி தனது தோழிகளுடன் சுற்றிப்பார்க்க சென்றிருந்தார்.  13 வது மாடிக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்து உற்சாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். நந்தினி தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக தடுப்பு சுவர் இல்லாத மாடியில் விளிம்பின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். திடீரென  கால் தடுமாறியதால் கீழே விழுந்தார்.

தற்கொலை மாடியில் இருந்து குதித்து

13-வது மாடியிலிருந்து கீழே விழுந்த நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.  ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியை கண்ட தோழிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரது பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் நந்தினி செல்பி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது தடுமாறியதால் கீழே விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது