உஷார்.. சுட்டெரிக்கும் சூரியன்... ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!

 
உஷார்.. சுட்டெரிக்கும் சூரியன்... ஒரே நாளில் 3 பேர்  உயிரிழப்பு!

தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.  நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வெயில்

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயல்பான கோடை வெயிலைக் காட்டிலும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் பதிவாகி உள்ளது. 
கடந்த 26ம் தேதி வாக்குப் பதிவின் போது கூட கேரளாவில் பூத் ஏஜென்ட் உட்பட 10 பேர் வெயில் பாதிப்பால் உயிரிழந்தனர். 

வெயில்

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கடும் வெயில் காரணமாக கேரளத்தில் 3 பேர் இறந்துள்ளனர்.  பாலக்காடு மாவட்டத்தில் கட்டிட பணிகளில்  ஈடுபட்டிருந்த 2 பேர் வெப்பம் காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.  அதைப் போலவே கோட்டயத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த  ஷமீர் (35) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் வெயில் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!