உஷார்.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. தெரியாம போய் சிக்கிக்காதீங்க!
இன்று ஞாயிறு விடுமுறை தினத்தில், உங்கள் விடுமுறையை பாழக்குவது போல டேக் டைவர்ஷனில் சிக்கிக்காதீங்க. இன்று சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து இந்த குறிப்பிட்ட பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று சென்னை எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் KEC நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர் .

இதனையடுத்து இன்று ஜூலை 14ம் தேதி சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லக்கூடிய மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி லேக் வியூ சாலையில் இருந்து வலது புறம் திரும்பி ராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லும்.

மடிப்பாக்கத்திலிருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை தனியார் வங்கி வழியாக சென்று வலது புறம் திரும்பி லேக் வியூ ஆடையிலிருந்து மீண்டும் வலது புறம் திரும்பி ராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்க பயணத்தை திட்டமிட்டுக்கோங்க.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
