உஷார்... நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் ரயில் சேவை ரத்து!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

நாளை ஜூலை 7ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சேலம் தெற்கு கோட்ட ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக இந்த பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரயில்வே மக்கள் தொடர்பு துறை அதிகாரி மரியா மைக்கேல் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ரயில்

அதில்  ஜோலார்பேட்டையில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு- ஜோலார்பேட்டை செல்லும் ரயில் (வண்டி எண்-56108) நாளை ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. 

 எக்ஸ்பிரஸ் ரயில்
இந்த நாட்களில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும். ஜோலார்பேட்டை- ஈரோடு செல்லும் ரயில் (வண்டி எண்-56107) நாளை முதல் 10ம் தேதி வரை ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.  திருப்பத்தூரிl இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். எனக்  கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?