உஷார் ... காருக்குள் வைத்து மது அருந்திய போது மூச்சுத் திணறி 2 சகோதரர்கள் உயிரிழப்பு!

 
கார்


 

ஆந்திர மாநிலத்தில் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் வசித்து வந்தவர் 25 வயது திலீப் . அந்தப் பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார்.  இவருடைய சகோதரர் 20 வயது வினய்.  இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் திருச்சானூர் அருகே உள்ள கலுவ கட்டா பகுதிக்கு சென்றுள்ளனர்.


அங்கு தாங்கள் சென்ற காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள்ளே குடிக்க ஆரம்பித்து விட்டனர்.  ஏசியை ஆன் செய்துவிட்டு மது அருந்த ஆரம்பித்த அவர்கள் அதிக அளவில் குடித்ததால் மதுபோதையில் இருந்தனர். அப்போது காரின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த ஏசி பெட்ரோல் தீர்ந்து போனதால் நின்றுவிட்டது.  காரின் உள்ளே காற்றோட்டம் இல்லாத நிலையில் சகோதரர்கள் இருவரும் வெளியே வர முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
காரின் மேலே பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டிருந்ததால்  உள்ளே இருந்தது வெளியே தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து திலீப்பின் தந்தை மறுநாள் காலை காரின் மீது இருந்த கவரை அகற்றியபோது மகன்கள் இருவரும் உயிரிழந்தனர்.  இது குறித்த  காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சகோதரர்கள் 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு..!!
மேலும் மது போதையில் காரின் உள்ளே இருந்து கொண்டு ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குடிமகன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கூறினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?