உஷார்... பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு... 2 சிறுவர்கள் கைது!

 
செல்போன் பறிப்பு

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 இளஞ்சிறார்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அடிமைபீரிஸ் மகன் ரெனோபன் (23) இவர் நேற்று மாலை கோவில் திருவிழாக்காக துணி எடுப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த 3 பேர் இவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு 15 ஆயிரம் ஆகும்.

பணம் பறிப்பு

அப்போது பேருந்து நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் விரட்டி பிடித்து மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர்கள் கீழ தட்டாபாறை மேல தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் இசக்கி செல்வம் (19) மற்றும் 2 இளஞ்சிறார்கள் என்று  தெரியவந்தது. இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து  இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?