பூமி மீது வேற்றுக்கிரகவாசிகள் படையெடுப்பு?! நவம்பரில் காத்திருக்கும் அதிர்ச்சி!

 
வேற்று கிரகவாசி

வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் வசித்து வருகிறார்களா இல்லையா என்பது  நீண்டகால விவாத பொருளாக உள்ளது. ஒருவேளை ஏலியன்கள் இருக்கும்பட்சத்தில்  அவை உருவில், அளவில் எப்படி இருக்கும்? மனிதர்களை போன்ற வடிவை கொண்டிருக்குமா? அல்லது வேறு ஏதேனும் வடிவத்துடன் இருக்குமா? அவற்றின் சக்தி எந்தளவுக்கு இருக்கும்? என்பது குறித்த பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.  இந்நிலையில், பூமியின் மீது  நவம்பரில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த போகிறது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர். 

வேற்று கிரகவாசி

அதன்படி பூமியை நோக்கி மேன்ஹேட்டன் நகரம் அளவிலான அந்த மர்ம பொருள் ஏவப்பட்டு உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  அது, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். அந்த பொருளுக்கு விஞ்ஞானிகள் 3I/அட்லஸ்  என ஆய்வாளர்கள் பெயரிட்டு உள்ளனர். இந்த மர்ம பொருள், ஏலியன்களின் தொழில் நுட்பம் உதவியுடன், பூமி மீது திடீர் தாக்குதல் நடத்த கூடும் எனக் கூறியுள்ளனர்.  

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிரபல வான் இயற்பியலார் ஏலியன்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில்  அவி லோயப்  சர்ச்சைக்குரிய முரண்பாடான விசயங்களை வெளியிட்டு வருபவர். 2017ல்  முதன்முறையாக சூரிய குடும்பம் அல்லாத விண்கல் ஒன்று பூமியின் அருகில் வந்தது.  இதனை பற்றி  அவி, அது வேற்றுகிரகவாசிகளின் செயற்கையான விசாரணையில் ஒன்றாக இருக்க கூடும் என கூறியிருந்தார்.  விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ள அந்த மர்ம பொருளானது, நவம்பர் இறுதியில், சூரியனை நெருங்கி வரும். அப்போது, பூமியின் பார்வையில் இருந்து அது மறைவாக இருக்கும். இதனால், ரகசிய அதிவிரைவான சூழ்ச்சியான விசயங்களை அது நடத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிலியில் உள்ள ரியோ ஹர்டாடோ பகுதியில் உள்ள தொலைநோக்கி ஒன்று முதன்முறையாக இந்த மர்ம பொருளை கண்டறிந்தது.  

வேற்று கிரகவாசி

இதனை  செப்டம்பர் வரை தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து காணலாம். அதன்பின்னர், அது சூரியனை நெருங்கி விடும். இதனால், பூமியில் இருந்து, அப்போது அதனை தெளிவாக காண முடியாது. அதற்கு பின்னர், டிசம்பர் மாத தொடக்கத்தில் சூரியனின் மறுபுறம் இருந்து அந்த மர்ம பொருள் தெரிய தொடங்கும். இது 700 கோடி ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. பூமி, சூரியனை விடவும் இது மிக வயது முதிர்ந்தது  . இது மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடும் என தெரிகிறது. அது உண்மையானால், மனித இனம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படும் என ஹார்வர்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?