அலிநகர் சீதைநகராக மாறும்... இளம் பிண்ணனி பாடகி எம்.எல்.ஏ மைதிலி தாகூர் உற்சாகம்!

 
பீகார்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 199 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட 25 வயது பாடகி மைதிலி தாகூர் தொடர்ச்சியாக முன்னிலை பெற்றுக்கொண்டிருக்கிறார். 13வது சுற்று முடிவில் அவர் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளரை விட 9,450 வாக்குகள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பீகார்

இவர் வெற்றிபெற்றால், பிகாரின் மிக இளமையான சட்டப்பேரவை உறுப்பினராக வரலாற்றில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. தனது தொடர்ச்சியான முன்னிலை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இது தனிப்பட்ட வெற்றி அல்ல, பிகார் மக்களின் வெற்றியாகும் என்றும் கூறினார். பெண்களுக்கான நிதீஷ் குமார் செயல்படுத்திய நலத்திட்டங்கள் தன்னிடம் பெரும் ஆதரவை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பீகார்

மேலும், “பிகார் மக்கள் மோடியை நேசிக்கிறார்கள்; NDA-வை விரும்புகிறார்கள். நான் வென்றவுடன் அலிநகரை சீதைநகராக மாற்றுவேன்” என மைதிலி தாகூர் தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!