அட பாவமே... 359 கிராம் தங்க நகைகள்.. 10 ஐபோன்.. மொத்தமாக கம்பி நீட்டிய ஊழியர்!

 
தங்கம்

ஒண்ணு ரெண்டு கிடையாது.. மொத்தமா 359 கிராம் தங்க நகைகளையும், 10 ஐபோன்களையும் சுருட்டிக் கொண்டு, முதலாளிக்கு நம்பிக்கையாக நடித்து வந்த ஊழியர் கம்பி நீட்டி, தப்பி சென்றது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் கூட ஊழியர் திருடிச் சென்றதை நம்பாமல் திக் பிரமைப் பிடித்தவரைப் போல் இருக்கிறார் சாகுல் அமீது.

சென்னை அசோக்நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் சாகுல் அமீது, தனது வீட்டின் கீழ் தளத்தில் பழைய தங்க நகைகள் மற்றும் செல்போன்களை வாங்கி விற்பனை செய்யும் கடைஉஅஒ நடத்தி வருகிறார். இவரது கடையில், புதுக்கோட்டையை சேர்ந்த லமுனா மரைக்காயர்(28) என்பவர் சிறு வயதில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார்.

ஐபோன்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற லமுனா மரைக்காயர், மீண்டும் சாகுல் அமீதுவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே இருந்த நம்பிக்கையில் சாகுல் அமீது மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சாகுல் அமீது, 359 கிராம் நகைகள் மற்றும் 10 ஐபோன்களை லமுனா மரைக்காயரிடம் கொடுத்து பர்மா பஜாரில் உள்ள கடையில் கொடுத்து விட்டு வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

இது போன்று ஏற்கனவே பணியில் இருந்த போதும் பல முறை லமுனாவிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அப்போதெல்லாம் சரியாக செய்துமுடித்த லமுனா மரைக்காயர், இந்தமுறை பர்மா பஜார் செல்லாமல், நகை மற்றும் செல்போன்களை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

ஐபோன்

இதனிடையே, நகைகளும், செல்போனும் குறிப்பிட்ட கடைக்கு சென்றடையவில்லை என தெரிய வந்தது. லமுனாவை தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்கவில்லை என்பதால் சாகுல் அமீது சந்தேகம் அடைந்தார். பின்னர் இது குறித்து சாகுல் அமீதின் மகன் முஸ்தாக் அகமது(19) அசோக் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் லமுனா மரக்காயரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web