இந்தியா முழுவதும் பொது வேலைநிறுத்தம்... ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி!
தொழிற்சங்கங்கள் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர் சங்கங்கள் உட்பட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
அதில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும்,

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் சாத்தியம் உள்ள இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும் வங்கிகள், காப்பீடு , தபால் சேவை முதல் நிலக்கரி சுரங்கம் வரையிலான துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அத்துடன் வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், வர்த்தகம் மற்றும் மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் காங்கிரஸ், மதிமுக , விடுதலை சிறுத்தைகள் உட்பட பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் போராட்டத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. ஆகையால் அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்குச் செல்வார்கள் என்பதால் பேருந்து சேவை பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
