இந்தியா முழுவதும் ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டை பூட்டு முறை!!

 
ரயில் சிக்னல்

ஜூன் 2ம் தேதி ஒடிசாவில்   சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நிகழ்த்தப்பட்டு அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  

ஒடிசா

இந்த விபத்தின் பின்னணி என்ன என்பது இன்னும் உறுதிபடத்தெரியவில்லை. இதில் நாசவேலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள பகனகா பஜார் ரயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் 'லாக்' புத்தகத்தையும், இன்னும் சில கருவிகளையும் கைப்பற்றி உள்ளனர்.

ரயில்

இந்நிலையில், ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலை தொடர்பு சாதனங்கள், சிக்னல்  அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டைப்பூட்டு முறையை பின்பற்ற ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது .  ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பு அடங்கிய ரிலே அறையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web