தமிழகம் முழுவதும் 30646 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள்!

 
மாணவிகள் அரசு பள்ளி

 இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி சதவீதம் அதிகம். 91.66%  தேர்ச்சி சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் 96.85 %, ஆங்கிலத்தில் 99.15 % பேரும், கணிதத்தில் 96.78 % பேரும், அறிவியலில்96.72 % பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 %  பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.12 625 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில்4105 பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆயிரத்து 364 அரசுப்பளிகளும் அடங்கும்.

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உடனடியாக அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்வுத்துறையின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும்.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்து முடிந்தன. முன்னதாக பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்டன.  

 அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12,616 பள்ளிகளில் படித்து வரும் 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகளும், மாற்றுப் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர். இவர்களைத் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஏப்ரல் 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 20000   பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருத்தும் பணிகள் முடிந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web