அச்சச்சோ!! இனி லீவே இல்ல... எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் தான்!!

 
மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஜூன் 12 ம் தேதி  திங்கட்கிழமை கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வழக்கமாக ஜூன் முதல்வாரத்திலேயே பள்ளிகள் தொடங்கப்பட்டு விடும். நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 1ம் தேதியிலிருந்து ஜூன் 5ம் தேதிக்கும் பிறகு ஜூன் 12ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டன.  அதன்படி  நாளை ஜூன் 12ம் தேதி திங்கட்கிழமை 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், ஜூன் 14ல் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசுப்பள்ளி மாணவர்கள்

அதன்படி பள்ளிகள் திறப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோடை விடுமுறைக்கு பின் தாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் ”தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள  முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை.இந்த போட்டிகளில்  9க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.   

பள்ளி மாணவர்கள்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால்  கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏற்ற வகையில்  சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். இனி வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதபடி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web