இன்னைக்கே வாங்கிடுங்க... நாளை தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் விடுமுறை!
நாளை மே 5ம் தேதி வணிகர் தினம். 41 வது வணிகர் தினத்திற்கான மாநில மாநாடு மதுரையில் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் வியாபாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள்,அவர்களின் மீதான அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்படும். அதனை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய விடுதலை முழக்க மாநாடாக நடத்தப்பட உள்ளது.

வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள வரிப்பிரச்சனைகள், ரவுடிகளால் தொல்லை, அதிகாரிகளால் தொல்லை இவைகளிலிருந்து வணிகர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.சங்கிலி தொடர் விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். 41வது மாநில மாநாட்டில் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அதனை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வணிக சங்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாளை கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உட்பட அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இதனையடுத்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
