15 வருஷமா விடுப்பில் இருக்கும் ஐ.டி. ஊழியர்... ஊதிய உயர்வுகோரி வழக்கு.. கடுப்பான நீதிபதி!

 
ஐபிஎம்

சர்வதேச அளவில் பிரபல அமெரிக்கவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம். இந்த நிறுவனத்தில் இயன் கிளிஃபோர்ட் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் உடல்நல பாதிப்பு காரணமாக விடுப்பில் இருந்துவருகிறார். 

ஐபிஎம் நிறுவனத்துடன் இயன் கிளிஃபோர்ட் 2013ஆம் ஆண்டில் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தின்படி, அவர் நிறுவனத்தின் இயலாமை ஓய்வூதியத் திட்ட பயனாளியாக (Disability plan) சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்திட்டத்தின்படி அவர் உடல்ரீதியாக பணிபுரிய இயலாதவராக கருதப்படுவார். அதனால்தான் அவர் Medically Retired என்ற வகையின் கீழ் கொண்டுவரப்பட்டார்.

ஐபிஎம்

இந்த வகையின்கீழ் வரும் ஊழியர்கள், பணிபுரியாவிட்டாலும் நிறுவனத்தின் ஊழியராகவே கருதப்படுவர். அவர்களின் ஓய்வுக் காலம் வரை ஊதியத்தில் 75 சதவீத தொகையை பெறுவர். அந்த வகையில் இயன் கிளிஃபோர்டுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் கிடைத்துள்ளது. 

இதன் மூலம் இயன் கிளிஃபோர்ட் ஆண்டுக்கு 54,028 பவுண்டுகள், இந்திய மதிப்பில் சுமார் 55 லட்சம் ரூபாய் ஊதியமாக கிடைக்கும். அவர் ஓய்வு பெறும் 65வது வயது வரை இந்த தொகை கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில், விடுப்பு தொடங்கியதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி இயன் கிளிஃபோர்ட் ஐபிஎம் நிறுவனத்திற்கு எதிராக வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருக்கிறார். 15 ஆண்டுகளாக தனக்கு சம்பளம் உயர்த்தப்படாததால் தான் இயலாமை பாகுபாட்டுக்கு (Disability Discrimination) உள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு தற்போது கிடைத்து வரும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை எனவும் வாதிட்டிருக்கிறார்.

ஐபிஎம்

இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இயன் கிளிஃபோர்டின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், செயல்படும் ஊழியர்களே ஊதிய உயர்வைப் பெற தகுதியுடைவர்கள் ஆவர். செயலற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது என்பது கட்டாயம் அல்ல. மனுதாரருக்கு கிடைத்து வரும் ஓய்வூதியம் கணிசமான பலன் தான். அது குறைவானது என்று சொல்ல முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

  

From around the web