பாஜகவுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை... சீமான் பேட்டி!

 
சீமான்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

எடப்பாடி ஆர்ப்பாட்டம் அதிமுக

காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக - பாஜக கூட்டணியை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. அவர்கள் முடிவெடுத்து சேர்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அது அவருக்கு பலனை தந்திருக்கும். 

எடப்பாடி

தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அவருக்கு தேவையற்ற சுமை. இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பாஜகவுடன் இந்த அணிகளெல்லாம் இருந்திருந்தால், 15 எம்.பி.க்கள், மத்தியில் 2 மந்திரிகள் என இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தில் கணிப்பு தவறாக போய்விட்டது என்று நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது