குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

 
குற்றாலம்
 

கடந்த சில நாட்களாக அதிக நீர் வரத்து காரணமாக குற்றால மெயின் அருவியில் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 

இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த தடையானது நீடித்து வந்த நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 

குற்றாலம்
கோடை விடுமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளதால் உள்ளூர் மக்களும் குற்றால அருவியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web