கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

 
கும்பக்கரை அருவி

 தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்  கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இதனைச் சுற்றி பரவலாக நல்ல மழை பெய்தது.  இப்பகுதியில் தொடர்ந்து கண மழை பெய்து வந்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை காலமானதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.இந்த கனமழை காரணமாக   பொதுமக்களின் நலன் கருதி  கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை  தடை விதித்தது.  

கும்பக்கரை அருவி
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்வரத்து சீராகி விட்டதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலாத் துறை அனுமதி அளித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web