செம மாஸ்... மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது. இன்றுடன் கத்திரி வெயில் அக்னி நட்சத்திர காலம் நிறைவடைகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேர்வலாறு, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்து மழையும் குறைந்துள்ளது. மேலும் இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலால் சுற்றுலாப் பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
