ஏற்கனவே 2 திருமணம்.. 3வதாக திருமணம் செய்து இளைஞரை ஏமாற்றிய கில்லாடி பெண் கைது!
கரூர் மாவட்டம் புஞ்சைகளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ் (30). கொசு வலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா (36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது.
இதற்கிடையே ரேணுகாவுக்கு, புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர் என்பவருக்கும், கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது ரமேஷுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது ரேணுகா ரமேஷை உன்னை விட்டு சென்றால் ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை கேட்டுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ரேணுகா தப்பிக்க கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கரூர் அனைத்து மகளிர் போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து ரேணுகாவை கைது செய்தனர். விசாரணையில், ரேணுகாவுக்கு முதல் கணவருடன் ஒரு மகன், மகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரமேஷுக்கு திருமண ஏற்பாடு செய்த கோவையை சேர்ந்த புரோக்கர்கள் ஜெகநாதன், ரோஷ்னி, பழனிக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ரேணுகா மூவரைத் தவிர வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டாரா என்றும், மாப்பிள்ளை பார்க்கும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பழக்கம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!