மாறி மாறி பெட்ரோல் குண்டு வீச்சு.. முன்னாள் நண்பர்கள் வெறிச்செயல்.. 7 பேர் அதிரடியாக கைது!

 
ஓமலூர்  பெட்ரோல் குண்டு வீச்சு

ஓமலூர் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பன்னீர்செல்வம். பொட்டியபுரம் கிராமம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் சேது மகன் விஸ்வநாதன். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள்  நண்பர்களாக இருந்தனர்.

இருவரும் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.   இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு பன்னீர்செல்வம் வீட்டின் மீது விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேர் பெட்ரோல் குண்டை வீசினர். இதேபோல் அன்றைய தினம் பொட்டியபுரம் அண்ணாநகர் காலனியில் உள்ள விஸ்வநாதன் வீட்டின் மீது 4 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது. இதனால் 2 கிராம மக்களும் அச்சமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பு புகாரின் பேரில் ஓமலூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை தேடி வந்தனர். இதில், பொட்டியபுரம் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த விஸ்வநாதன் (24), பன்னீர்செல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய அஜித் (21), கருபுரத்தைச் சேர்ந்த பாலாஜி (20), மேட்டூரைச் சேர்ந்த பெரோஸ் (32), திருப்பூரைச் சேர்ந்த ரமேஷ் (35)  ராஜா (எ) ராஜபாண்டியன் (22) 6 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கமலாபுரம் பன்னீர்செல்வத்தை (25) போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூரைச் சேர்ந்த ரமேஷை ஓமலூருக்கு வருமாறு விஸ்வநாதன் அழைத்துள்ளார். காரில் வந்து நண்பர்களை அழைத்துச் சென்ற ரமேஷ், நள்ளிரவில் பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று பெட்ரோல் குண்டை வீசியதும், இருவரும் சிறையில் சந்தித்து நட்பு கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web