நெகிழ்ச்சி... லண்டனின் ஒன்று சேர்ந்த திருச்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்!

 
திருச்சி
 

திருச்சி கொங்குநாடு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் லண்டனில் ஒன்று சேர்ர்ந்து சந்தித்து, தங்களது பழைய நினைவுகளை அசைப்போட்டது நெகிழ்ச்சியாக இருந்தது.கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவ, மாணவிகள் இத்தனை வருடங்கள் கழித்து தங்களது நண்பர்களைச் சந்திக்க ஆவலுடன் வந்திருந்தனர். 

திருச்சி
லண்டனில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. லண்டன் Chapter 2024 என்ற பெயரில் இந்த சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரது கவனத்தியும் ஈர்த்தது. லண்டன் chapterன் நோக்கம் என்னவெனில் இதன் மூலம் பிற்காலத்தில் வரும் கொங்குநாடு மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு மேற்கொள்ளும் விதம், அதற்கான இயல் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கான உதவிகளை செய்வதாகும்.

திருச்சி
முன்னாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கொங்குநாடு கல்வி குழுமத்தின் சேர்மன் பெரியசாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web