அசத்தல்... 3271 காவலர்களுக்கு பணி நியமன ஆணை.. ஜூன் 1ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கம்!

 
ஸ்டாலின்

இன்று காலை தலைமைச் செயலகத்தில், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.36.39 கோடி செலவில் மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்களைத் திறந்து வைத்து, காவலர் பணியிடங்களுக்கு தேர்வான 3271 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஸ்டாலின்

காணொலிக் காட்சி மூலமாக இன்று காவல் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் திறந்த வைத்தார். 4245 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறைகள், கட்டுப்பாட்டு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, உணவருந்தும் கூடம், அலுவலக அறைகள், கூட்டரங்கம், கைரேகை பிரிவு. சைபர் லேப், சிசிடிவி கேமராக்கள், லிப்ட் வசதி, தீயணைப்பு கருவிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

tn

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்குத் தேர்வான 3271 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக 10 நபர்களுக்கு  பணிநியமன ஆணைகளை  வழங்கி த் உவங்கி வைத்தார்.

இன்று பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web