அசத்தலான நிறுவன ஷேர்... ஜஸ்ட் ரூ.11,854 கோடி தாங்க...அள்ளித் தெளித்தது ஈவுத்தொகையை!

 
சுரங்கம் கட்டுமானம்

இந்தியாவின் முன்னணி சிவில் கட்டுமான நிறுவனமான J Kumar Infraprojects Ltd, மார்ச் 31, 2023ல் முடிவடைந்த ஆண்டிற்கான காலாண்டு முடிவுகள் மற்றும் வருடாந்திர முடிவுகளை அறிவித்தது. முதலில் காலாண்டு முடிவுகளைப்பார்ப்போம் நிகர விற்பனை 1.77 சதவிகிதம் அதிகரித்தது, மேலும் நிகர லாபம் 0.19 சதவிகிதம் குறைந்துள்ளது, 23ம் காலாண்டில் 22ம் காலாண்டுடன் ஒப்பிடும்போது இபிஎஸ் ரூபாய் 9.76 ஆக இருக்கிறது.

மேம்பாலம் பாலம் இரவு வாழ்க்கை நைட்லைஃப்

அடுத்ததாக ஆண்டு முடிவுகளைப் பார்ப்போம் நிகர விற்பனை 19.16 சதவிகிதம் அதிகரித்தது, அதே சமயம் நிகர லாபம் 33.28 சதவிகிதம் அதிகரித்து 23ம் நிதியாண்டில் ரூபாய் 36.26 EPS ஆக இருந்தது. அசத்தல் ஆர்டர் புத்தகத்தை பாருங்கள் மார்ச் 31, 2023 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புத்தகம் ரூபாய் 11,854 கோடி மற்றும் 2022-2023 நிதியாண்டில், இந்நிறுவனம் ரூபாய் 2,652 கோடி ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இயக்குநர்கள் குழு 2022-23 நிதியாண்டில் ஈக்விட்டி பங்கிற்கு ரூபாய் 3.50 (அதாவது ஒரு ஈக்விட்டி பங்கின் முகமதிப்பு ரூபாய் 5ல் 70 சதவிகிதம்) ஈவுத்தொகையாகப் பரிந்துரைத்துள்ளனர்.

சுரங்கம் கட்டுமானம்

நிறுவனம் 2027ம் ஆண்டிற்குள் ‘பில்லியன் டாலர் கம்பெனி’ என்ற தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளது. ஒரு பில்லியன் டாலர் வருவாய் நிறுவனத்தை நோக்கி, நிறுவனம் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆர்டர் புத்தகத்தை 2027 நிதியாண்டுக்குள் மெட்ரோ திட்டங்களின் முக்கிய பங்களிப்பாளராக எதிர்பார்க்கிறது. இன்றைய வர்த்தகத்தில் தற்பொழுதைய நிலவரப்படி பங்குகள் ஒரு பங்கிற்கு 1.40 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 265க்கு வர்த்தகமாகி வருகிறது. பங்குகளின் PE 6.81x அதேசமயம் துறைசார்ந்த PE 26.7x ஆகும். இரண்டே ஆண்டுகளில் 42 சதவிகிதமும் மூன்று ஆண்டுகளில் 240 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்த மல்டிபேக்கர் பங்குகளை கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web