அசத்தல்.. AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் உலகின் முதல் DJ அறிமுகம் !

 
ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்

கடந்த சில மாதங்களாக AI தொழில்நுட்பம் என்பது அனைவரும் பேசப்படும் ஒரு தொழில்நுட்பமாக மாறி உள்ளது. அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் `ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது உலகம் முழுவதும் புது பாய்ச்சலை தொடங்கியுள்ளது. 

கணினித் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும். இதனால் பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் நிலவுகிறது. எனினும் பல துறைகளில் AI தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டு பலவித மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்

அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வானொலி நிலையம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) உருவாக்கி உள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆல்பா மீடியாவின் கேபிஎப்எப் லைவ் 95.5 FM ஆனது பியூட்டரி மீடியாவின் (Futuri Media) ரேடியோ ஜிபிடி (RadioGPT) மென்பொருளைப் பயன்படுத்தி இந்த டிஜேவை உருவாக்கி மிரளவைத்துள்ளது.

இது குறித்து பேசிய ஆல்பா மீடியாவின் நிர்வாக துணைத் தலைவர் பில் பெக்கர், ரேடியோ GPT ஆனது பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில், தகவல்களை தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்

இதற்கிடையில், பாடல்களை ஸ்ட்ரீமிங் செய்யும் தளமான ஸ்பாட்டிபை (Spotify UK) அயர்லாந்தில் உள்ள பிரீமியம் வாடிக்கையாளர்களுக்காக டிஜே எனப்படும் AI அம்சத்தை வெளியிட்டது. இந்த அம்சம் முதலில் பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பிரீமியம் சந்தாதாரர்களுக்குக் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!