அசத்தல் திட்டம்... தொழில் தொடங்க ரூ.17,00,000 லட்சம் மானியம் !

 
கடனுதவி

 இந்தியா முழுவதும் சிறு குறு விவசாயிகளுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டில் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் 28,789 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.50 லட்சமும், சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.20 லட்சமும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எந்தவித கல்வித் தகுதியும் தேவை இல்லை.  ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள்  குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் பறிமுதல்

இத்திட்டத்தில் மானியமாக ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உட்பட சிறப்பு பிரிவினருக்கு ஒட்டுமொத்த திட்டத் தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) வழங்கப்படும். அதவாது ரூ.50 லட்சம் திட்டம் மதிப்பீட்டில், சுமார் ரூ.17.5 லட்சம் மானியமாக அரசு செலுத்தும்.  
தொழில் முனைவோர் தங்கள் பங்களிப்பு நிதியாக வெறும் 5% நிதி அளித்தால் போதுமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு இது 10% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறையின் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு அடமானம் தேவையில்லை. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

பணம் பறிமுதல்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள்  kviconline.gov.in/pmegpeportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில்  விண்ணப்பித்து பயனடையலாம்.  விண்ணப்பங்களை, நேரடியாக பரிசீலனை செய்து அவற்றை கடன் வழங்கும் முடிவுகள் எடுப்பதற்காக, நேரடியாக வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இணையதளத்தில் மானியம் கோருவதற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் தொழில் முனைவோர் மேம்பாடு நடத்தும் 5 நாள் தொழில் முனைவோர் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web