அசத்தல்... ரியாலிட்டி ராக்கெட் மல்டிபேக்கர் ஸ்மால்-கேப் நிகர லாபம் 335 சதவிகிதம் உயர்வு!

 
அடுக்குமாடி இயற்கை  கட்டுமானம் பில்டிங்

கோல்டே-பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் மும்பை மற்றும் பெங்களூரில் வளர்ந்து வரும் புனேவை தளமாகக் கொண்ட ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமானது, மார்ச் 31, 2023ல் முடிவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான முடிவுகளை அறிவித்தது. விபரங்கள் கீழே உங்களுக்காக....

Q4FY23க்கான நிதிச் சிறப்பம்சங்கள் :

மொத்த வருவாய் ரூபாய் 796.93 கோடியாக உள்ளது, இது Q4FY22 ஐ விட 111.91 சதவிகிதம் அதிகமாகும்.

செயல்பாட்டு லாபம் ரூபாய் 180.91 கோடியாக இருந்தது, இது Q4FY22 ஐ விட 298.57 சதவிகிதம் அதிகமாகும்.

வரிக்குப் பிந்தைய லாபம் ரூபாய் 116.90 கோடியாக இருந்தது, இது Q4FY22ஐ விட 335.87 சதவிகிதம் அதிகமாகும்.

Q4FY23க்கான EPS ரூபாய் 15.38 ஆக இருக்கிறது.

கோல்டே பாட்டீல்

FY23க்கான நிதி சிறப்பம்சங்கள் :

மொத்த வருவாய் ரூபாய் 1,488.43 கோடியாக உள்ளது, இது FY22ஐ விட 33.20 சதவிகிதம் அதிகமாகும்.
செயல்பாட்டு லாபம் FY22 ஐ விட 8.11 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 221.86 கோடியாக இருந்தது.
வரிக்குப் பிந்தைய லாபம் 22ம் நிதியாண்டைக்காட்டிலும் 31.17 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 113.38 கோடியாக உள்ளது.
Q4FY23க்கான EPS ரூபாய் 13.48 ஆக இருக்கிறது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று, கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் பங்குகள் 2.80 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூபாய் 305.20 ஆக நிறைவடைந்தது, நாளின் அதிகபட்சமாக் ரூபாய் 320.70 ஆகவும், நாளின் குறைந்தபட்சம் ரூபாய் 303.10 ஆகவும் இருந்தது.

அடுக்குமாடி இயற்கை  கட்டுமானம் பில்டிங்

கோல்டே-பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கலப்பு குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களை உருவாக்குகிறது. நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இயில் 2.17 மடங்குக்கு மேல் அதிகரித்தன. ஒரு வருடத்தில் 34.70 சதவிகிதமும், 2 ஆண்டுகளில் 45 சதவிகிதமும் மூன்றாண்டுகளில் 100 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்த ஸ்மால் கேப் ரியாலிட்டி பங்கு மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web