மினி பட்ஜெட்டில் எழில் கொஞ்சும் அசத்தலான சுற்றுலா ஸ்பாட்....!!

 
குன்னூர்

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று குன்னூர். இந்த மலை  பிரசித்தி பெற்ற  2வது பெரிய மலை.  இந்த இடம், சுமார் 1930 மீட்டர் உயரத்தில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு விருந்து தந்து எதிர்ப்பார்ப்பை மனதில் ஏற்றுகிறது.   குன்னூர் அழகிய காட்சிகளுடன் முன்னனி வகிக்கும் ஒரு இடமாகவும், காட்சிகளால் மனதினை கொள்ளை கொள்ளும் ஒரு இடமாகவும் அமைந்துள்ளது.  கேத்ரின் நீர்வீழ்ச்சியின் அழகில் தொலையும் நம் மனம்...மீண்டும் நம்முடன் வர அடம்பிடித்து நீரிலேயே தங்குகிறது. அதுமட்டுமல்லாமல், டால்பின் நோஸ், லா நீர்வீழ்ச்சி, குயெர்ன்சி தேயிலை தொழிற்சாலை என செல்லும் இடமெல்லாம் மனதினை துள்ள வைக்கும் காட்சிகள் அமைந்து இதமானதோர் உணர்வினை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி நமக்கு வழங்குகிறது.

குன்னூர்


 டால்பின் நோஸ் சுற்றுலா தளம் குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு செல்லக்கூடிய சாலையானது மிகவும் அழகிய தலையாகும் 2 புறங்களிலும் டேய் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய சாலை ஆங்காங்கே சிறு சிறு கிராமங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் சாலையாகும்.இந்த சாலையில் வலியே டால்பின் நோஸ் காட்சி முனையை சென்றடைந்த உடன் இங்கு பெரியவர்களுக்கு 30 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது இது தவிர புகைப்பட கருவிகளுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ட்ரோன் கேமரா முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குன்னூர்

நுழைவு கட்டணங்களை வசூலித்த பின்னர் நுழைவுச்சீட்டை, கொடுத்து உள்ளே செல்லலாம் உள்ளே செல்லும் வழி எங்கிலும் குரங்கு கூட்டங்களில் சேட்டைகள் சற்று பதறவிட்டாலும் பார்ப்பதற்கு ரசிக்கும் படியாகவே உள்ளது. அதன் பின்னர் டால்பினின் மூக்கு வடிவத்தில் அமைந்திருக்கும் காட்சி முனையில் நின்றபடி மலைத்தொடர்களின் அழகை ரசித்துக்கொண்டே ஆர்ப்பரித்துக் கொட்டும் கேத்தரின் நீர்வீழ்ச்சியின் அழகையும் இங்கிருந்து நம்மால் பார்க்க முடியும்.மேலும் சமவெளிப் பிரதேசங்களில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் காட்சிகளையும் இங்கிருந்து நம்மால் பார்க்க முடிவது மனதிற்கு நிம்மதியை தருகிறது. இது மட்டும் இன்றி கடல் மட்டத்திற்கு மேல் இவ்வளவு உயரத்தில் நாம் இருக்கிறோமா என்ற பிரமிப்பையும் நமக்கு கொடுக்கிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web